குறிப்பாக மாணவர்கள் பலரும் ஜீன்ஸ் அணிந்து கல்லூரிக்கு வருவதாகவும், சிலர் அணியும் ஜீன்ஸ், பல மாதங்களாக துவைக்காத ஜீன்ஸ் என்றும் கல்லூரி முதல்வருக்கு பல்வேறு தரப்பில் இருந்து புகார் கூறப்பட்டது. இதுபோல கல்லூரியில் பல்வேறு ஒழுங்கீனங்கள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் கல்லூரி நிர்வாகத்தை வலியுறுத்தினர். இதையடுத்து கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்குள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதாக 18 பேர் சஸ்பெண்ட் செய்தது. மேலும் கல்லூரி நிர்வாகிகள் கல்லூரியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கடந்த 21-ந்தேதி கூடி ஆலோசனை நடத்தினர்.இந்த கூட்டத்தில் மருத்துவக்கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாட்டை கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.
ஜீன்ஸ், கொலுசுக்கு தடை :
அதன்படி, மாணவர்கள் ஜீன்ஸ், டீ-சர்ட், கேஸ்வல் ஆடைகள் அணிந்து வகுப்புக்கு வரக்கூடாது. 'பார்மல் டிரஸ்' அணிந்து 'டாக்டர் கோட்' போட்டப்படியே வகுப்புக்கு வர வேண்டும். மாணவிகள், லெக்கின்ஸ் மற்றும் இறுக்கமான உடை அணிந்து வகுப்புக்கு வரக்கூடாது. ஒலி எழுப்பும் கொலுசு போன்ற ஆபரணங்கள் அணிந்து வரக்கூடாது. தலைமுடியை விரித்து போடாமல் நன்றாக கட்டியிருக்க வேண்டும். சுடிதார், சேலை அணிந்து அதன் மீது 'டாக்டர் கோட்' போட்டப்படியே வகுப்புக்கு வரவேண்டும். இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மருத்துவக்கல்லூரியின் துணை முதல்வர் பெயரில் சுற்றறிக்கையாக வெளியிடப்பட்டது. மேலும் இந்த கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும், தெரிவிக்கப்பட்டது.
Comments