இம்மாத இறுதியில் பருவமழை துவங்கும்

தினமலர் செய்தி : சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இந்த மாத இறுதியில் தான் துவங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி: வரும் 27 ம் தேதிக்கு பின்னரே வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சமயபுரத்தில் 5 செ.மீ., மழையும். லால்குடியில் 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது என கூறப்பட்டுள்ளது.

Comments