தமிழக தேவைக்காக, ஆண்டு தோறும், 192 டி.எம்.சி., காவிரி நீரை கர்நாடகா வழங்க வேண்டும். இந்தாண்டு, ஜூன் முதல் செப்., வரை வழங்க வேண்டியதில், 81 டி.எம்.சி.,யை கர்நாடகா பாக்கி வைத்துள்ளது. இதனால், டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்கு, தொடர்ந்து தண்ணீர் திறப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
இந்நிலையில், தமிழகத்திற்கு வினாடிக்கு, 2,000 கன அடி நீர் திறக்க, அக்., 18ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரு வாரமாகியும், தமிழகத்திற்கு நீர் திறக்காமல் கர்நாடகா பிடிவாதமாக உள்ளது. இது, டெல்டா விவசாயிகள்மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதனால், காவிரி நீரை பெற மீண்டும் நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை, தமிழக அரசுக்கு ஏற்பட்டு உள்ளது. இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில், இப்பிரச்னை குறித்து விவாதிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், நீதிமன்றத்தை அணுகுவதற் கான ஏற்பாடுகளில், காவிரி தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகளும் கவனம் செலுத்தி வருகின்றனர்.
Comments