எம்.ஜி.ஆரைக் காதலித்தீர்களா என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்லியிருப்பார் ஜெ.... வைரலாகும் வீடியோ!

சென்னை: சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது முதல்வர் ஜெயலலிதாவின் 17 ஆண்டுகளுக்கு முந்தைய வீடியோ பேட்டி... அந்த பேட்டியில் தம்முடைய இளம்பிராயம், அம்மா மற்றும் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். குறித்த எண்ணங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஜெயலலிதா.



சிமி கரேவலுக்கு 1999-ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா பேட்டி அளித்திருந்தார். அப்பேட்டியில் தம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விகளுக்கு இயல்பாக, தெளிவான ஆங்கிலத்தில் பதிலளிக்கிறார்.

ஜெயலலிதாவை ஒரு இரும்புமனுஷியாக கருதும் இன்றைய தலைமுறை அந்த வீடியோவை பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கிப் போகிறது.. ஒரு சிறு கோபமும் வெளிப்படுத்தாமல் பாச உணர்வுகளை நெகிழ்ச்சியுடன் அவ்வளவு இயல்பாக பகிர்ந்து கொள்கிறார் ஜெயலலிதா.

இளம்வயதில் தமக்கு யார் மீதெல்லாம் ஈர்ப்பு இருந்தது என்பதை வெளிப்படையாக சொல்கிறார்.. ஆஜா சனம் இந்தி பாடலை பாடுகிறார்... எம்.ஜி.ஆரை காதலித்தீர்களா? என்ற கேள்விக்கு கூட அட்டகாச புன்னகையுடன் அசராமல் பதில் தருகிறார். ஜெயலலிதாவின் இயல்பு முகத்தை வெளிப்படுத்தும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்படுகிறது.

Comments