சிவகாசி - விருதுநகர் பைபாஸ் சாலையில் உள்ள, ராகவேந்திரா பட்டாசு கடையில், நேற்று நண்பகல், 12:00 மணிக்கு, வெளியூர்களுக்கு அனுப்ப, பட்டாசுகளை ஊழியர்கள், மினி லாரியில்ஏற்றினர். அப்போது, பட்டாசு பெட்டி களில், தீ கிளம்பியது. அங்கிருந்தவர்களால் புகையை கட்டுப்பட்டுத்த முடியவில்லை. பட்டாசுகள் வெடித்து, புகை பூதாகரமாக கிளம்பியது. அருகில் உள்ள கடைக்காரர்கள் உட்பட அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.
வான் உயர கரும்புகை :
சிறிது நேரத்தில், பட்டாசுகள் பல திசைகளிலும் பறந்து வெடிக்க ஆரம்பித்தன. பட்டாசு கடைக் குள் விழுந்த தீயால், பட்டாசு கடை முழுவதும் வெடிக்க ஆரம்பித்து, பெரும் கரும்புகை கிளம்பி யது. தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியபடி இருந்தனர். மினி லாரி எரிந்து நாச மானது. கடைக்கு அருகே நிறுத்தப் பட்டிருந்த, 20 டூ - வீலர்கள் கருகி எலும்பு கூடுக ளாகின. பட்டாசு கடை அருகில் உள்ள மற்ற, இரண்டு கடைகளும் முற்றிலும் சேதமடைந்தன.
மூச்சுத்திணறல் :
பட்டாசு கடையின் பின்புறம், 'ஸ்கேன் சென்டர்' உள்ளது. டாக்டர்கள், நர்ஸ்கள் உட்பட, 15க்கு மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வந்தனர். தீயுடன், கரும்புகை, ஸ்கேன் சென்டருக்குள் பரவியதால், பணியாளர்கள் யாரும் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கினர். ஸ்கேன் எடுக்க வந்தவர்களில் பெண்கள் அதிகம் இருந்தனர். அனைவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அங்கிருந்த பாதிக்கும் மேற்பட்ட ஸ்கேன் மிஷின்கள் எரிந்து நாசமாகின.
இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின், தீயணைப்பு துறையினர் 22 பேரை மீட்டனர். காயமடைந்தவர்கள், மயக்க நிலையில், சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். இவர்களில், 18 - 44 வயதுடைய, எட்டு பேர் உயிரிழந்தனர். இதில், ஆறு பேர் பெண்கள். 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
ஒரு வழி பாதையால் மீட்பதில் சிக்கல் :
மினி லாரியில், பட்டாசுகளை ஏற்றியவர்களுக்கு, பேன்சி ரக பட்டாசின் வீரியம் தெரிந்ததால், அருகில் இருந்த கடைக்காரர்களையும், மக்களையும், 'ஓடுங்கள்... ஓடுங்கள்...' எனக் கூறியதால் விபத்திலிருந்து பலர் தப்பினர். பட்டாசு கடை பின்புறம் உள்ள, 'ஸ்கேன் சென்டர்' பணியாளர்களுக்கும், அங்கிருந்த நோயாளிகளுக் கும் தீ விபத்து குறித்து ஏதும் தெரியவில்லை.
பட்டாசு வெடித்து கிளம்பிய புகை, ஸ்கேன் சென்டருக்குள் புகுந்ததும், 'ஏசி' அறைகளில் புகுந்த புகையால் உள்ளிருந்தவர்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கினர். ஸ்கேன்சென்டருக்கு, ஒரு வழிப் பாதை மட்டுமே இருந்த தால், வெளியே வர முடியாமல் புகையில் சிக்கிக் கொண்டனர். தீயணைப்பு வீரர்கள், ஸ்கேன் சென்டரின் பின்பக்க ஜன்னலை உடைத்து, உள்ளே சென்று மீட்டனர். ஸ்கேன் சென்டர் முழுவதும் புகை சூழ்ந்ததால், பாதிக்கப்பட்ட வர்களை தீயணைப்பு துறையினரால் உடனடியாக மீட்க முடியவில்லை.
'பெரும் சத்தம்' :
பட்டாசு கடைஅருகே உள்ள ஓட்டலில், புரோட்டா மாஸ்டராக பணிபுரியும், மதுரை டி.கல்லுப்பட்டி யைச் சேர்ந்த கருப்பசாமி கூறியதாவது: லாரியில் பட்டாசுகளை ஏற்றிக் கொண்டிருந்த போது, திடீரென லாரிக்குள் இருந்து புகை கிளம்பியது. அதை, மண் அள்ளிப்போட்டு அணைக்க ஊழியர் கள் முயன்றனர்; ஆனால், அணைக்க முடிய வில்லை. புகையால், உள்ளிருந்த பட்டாசுகள் வெடிக்க ஆரம்பித்தன.
பட்டாசுகள் பறந்து, 'டாம்... டும்...' என, பெரும் சத்தத்துடன் வெடித்தன. இதனால், அங்கிருந்த வர்கள் அனைவரும் ஓட்டம்பிடித்தனர்.தொடர்ந்து பட்டாசுகள் வெடித்ததாலும், கரும்புகை அதிக மானதாலும், பட்டாசு கடை பின்னால் இருந்த ஸ்கேன் சென்டர் பணியாளர்களால் வெளியே வர முடியாமல் போய் விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்கேன் சென்டர் ஊழியர் நால்வர் பலி :
பட்டாசு விபத்தில், ஸ்கேன் சென்டர் ஊழியர்கள், நான்கு பேர் இறந்துள்ளனர். ஸ்கேன் எடுக்க வந்தவர்களில், நால்வர் இறந்துள்ளனர். சிகிச்சை பெறுபவர்களில், நான்கு பேர், ஸ்கேன் சென்டர் கூலித்தொழிலாளியாக பணியாற்றிவர்கள்.
துணை போகும் அதிகாரிகள் :
சிவகாசியில், 100க்கு மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன.இக்கடைகள், 20 ஆண்டுகளுக்கு முன் உரிமம் பெற்றவை.. தற்போது, 2008 வெடிபொருள் கட்டுப்பாட்டு சட்டத்தின் படி, நகருக்குள் பட்டாசு கடைகள், கிடங்குகள் இயங்க கூடாது. இதனால், தற்போது நகருக்குள் பட்டாசு கடைகளுக்கு உரிமம் வழங்குவ தில்லை.
பழைய பட்டாசுக் கடைகள் முந்தைய உரிமத்தை புதுப்பித்து இயங்கி வருகின்றன. இதை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், நகர் பகுதியில் பட்டாசு கடைகளில் சிறிய விபத்து ஏற்பட்டாலும், உயிர் பலியாவது அதிகரித்து வருகிறது.இதை தவிர்க்க, நகரின் ஒதுக்கு புறத்தில் கடைகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதைய விதிமுறை படி, பட்டாசு கடைகளை சுற்றி, 100 அடி துாரத்திற்கு குடியிருப்பு பகுதி இருக்க கூடாது. இதை கடைபிடித்தாலே பெரும் விபத்துக்கள் ஏற்படாது.
கண்ணை மறைக்கும் லஞ்சம் :
தீபாவளி நெருங்கி வருவதால், பட்டாசு கடைகளில்விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. வெளியூர்களுக்கு பார்சல் அனுப்ப, விதிமீறிகளை மீறி லாரிகளில் அதிக பாரம் ஏற்றுவது, இருசக்கர வாகனங்களில் கொண்டு செல்வது தொடர்கிறது. இதை கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகள் லஞ்சம் பெற்று, பேசாமல் இருந்து விடுகின்றனர். அதிகாரிகள், கண்ணை லஞ்சம் மறைத்து விடுவதால் நடவடிக்கை எடுப்பதில்லை.
'லஞ்சம் கொடுத்துவிட்டால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது' என்ற தைரியத்தில், கடை உரிமையாளர்கள் விதிமீறல் செயல்களில் ஈடுபடுகின்றனர்; இதுவே பெரிய விபத்திற்கு வழிவகுக்கிறது.
உரிமையாளர் மீது வழக்கு :
பட்டாசு கடையில், விதிகளை மீறி அளவுக்கு அதிகமான சரக்கு இருப்பு இருந்ததே விபத்திற்கு காரணம். எந்த பெரிய விபத்து நடந்தாலும் ஆலை உரிமையாளர், பட்டாசு கடை நடத்துனர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து முடித்துக் கொள்கின்றனர்.
விதிமீறல் தொடர்பாக கடும் நடவடிக்கை இல்லாததால், விதிமீறல்கள் எல்லை மீறி செல்கின்றன. இதனாலே விபத்துகள் ஏற்பட்டு, அப்பாவிகள் உயிரிழப்பும் தொடர்கிறது. எப்போதும் போல இந்த விபத்திலும், பட்டாசு கடை உரிமையாளரான ஆனந்த் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
பட்டாசு விதி சொல்வது என்ன? :
வெடிபொருள் கட்டுப்பாட்டு விதி, 2008ன் படி, பட்டாசு இருப்பு வைத்து வியாபாரம் செய்ய உரிமம் பெற்றவர்கள், அங்கீகரிக்கப்பட்ட வரைபடம், பட்டாசு இருப்பு பதிவேடு, போதிய தீத்தடுப்பு சாதனங்கள் வைத்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட இடத்தை விடுத்து, பட்டாசு களை வெளியில் வைப்பதும், அனுதிக்கப்பட்ட அளவிற்கு மேல் இருப்பு வைப்பதும், அவசர வழிகளை அடைத்து வைப்பதும், குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதும் குற்றம்.
Comments