5 வருசமா என்ன செஞ்சீங்க? கேள்வி கேட்ட மக்களை தாக்கிய அதிமுக கவுன்சிலர் ஆட்கள்!

Nakkeeran News : புதுக்கோட்டை நகராட்சி 9 வது வார்டு கவுன்சிலர் அதிமுக செல்வம். இன்று மாலை அம்பாள்புரம் பொதுமக்கள் கவுன்சிலர் வீட்டுக்குச் சென்று இந்த வார்டுல ஜெயிச்சு மக்களுக்கு என்ன செஞ்சீங்க.. ரோடு இல்லை, குடிக்கிற தண்ணி வாரம் ஒரு முறை தான் வருது என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் போது கவுன்சிலர் செல்வத்துடன் நின்ற சம்மாயி அருகில் கிடந்த கம்பியை எடுத்து தாக்கியதில் சாந்தார்(45), சரவணன்(42), சிரீதர்(18), அழகர்(46)., பழனிவேல்(35) ஆகிய 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

ரத்தத்துடன் அரசு மருத்துவமனைக்கு வந்தவர்களுக்கு முதலுதவி செய்த மருத்துவமனை அலுவலர்கள் வீட்டுக்கு போங்க என்று அனுப்பியுள்ளனர். காயம் அதிகமாக உள்ளது தங்கி சிகிச்சை எடுக்க வேண்டும் என்று காயமடைந்தர்களும் அவர்களின் உறவினர்களும் கூறிய பிறகு வெளியே அனுப்பியதால் ஆளும்கட்சி கவுன்சிலருக்கு சாதகமாக மருத்துவமனை செயல்படுகிறது என்றும் அடியாள் வைத்து தாக்கிய கவுன்சிலர் செல்வம் மற்றும் தாக்கிய சம்மாயி ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று திடீர் சாலை மறியல் செய்தனர்.

Comments