3 தொகுதிகளில் இடைத்தேர்தல்; திமுக வேட்பாளர்கள் யார்?

தினமலர் செய்தி : சென்னை: நடக்கவிருக்கும் 3 தொகுதி இடைத்தேர்தலில் திமுக., வேட்பாளரிடம் கருணாநிதி நாளை நேர்காணல் நடத்துகிறார். இந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பலர் மனுக்கள் அளித்து வருகின்றனர்.வரும் 19ம் தேதி அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்பாளர்களை அதிமுக அறிவித்து விட்டது. இந்த தேர்தலில் பல்வேறு கட்சிகள் போட்டியிடவில்லை என அறிவித்து விட்டது. இந்த தேர்தலை பொறுத்த மட்டில் அதிமுக - திமுக., இடையே தான் கடும் போட்டி இருக்கும். 

திமுக தரப்பில் போட்டியிட விரும்புவோர் தங்களின் மனுக்களை அளிக்கலாம் என திமுக தலைமை கழகம் அறிவித்திருந்தது. இதன் அடிப்படையில் இன்று அறிவாலயத்தில் திமுகவினர் பலர் வந்திருந்தனர். அறிவாலய மானேஜர் பத்மநாபன், தலைமை நிலைய செயலர் பூச்சி முருகன் , ஜெயக்குமார் ஆகியோர் மனுக்களை பெற்று கொண்டனர். 

3 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்தவர்கள் விவரம் வருமாறு: 

01. அரவக்குறிச்சி - பழனிச்சாமி .

02. தஞ்சாவூர் - ஜெயப்பிரகாஷ் தேமுதிகவில் இருந்து சமீபத்தில் திமுகவுக்கு வந்தவர். திமுக இளைஞரணி அமைப்பாளர் சன் ராமநாதன், 

03. திருப்பரங்குன்றம் - மாநில திமுக., மருத்துவ அணி துணை தலைவர் டாக்டர் சரவணன். கவுன்சிலர் ரோஸ் முத்தையா, ஒன்றிய செயலர் ஈஸ்வரன். 

கருணாநிதி நாளை நேர்காணல்:

திமுக., வேட்பாளர்களை தேர்வு செய்வதில் கட்சியின் தலைவர் கருணாநிதி நாளை நேர்காணல் நடத்துகிறார். நாளையே வேட்பாளர்கள் பெயர் விவரம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments