சிவகாசி பட்டாசு கிடங்கில் வெடிவிபத்து: 10 பேர் பலி ?

தினமலர் செய்தி : சிவகாசி: சிவகாசி அருகேயுள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 9 பேர் பலியானார்கள். மேலும் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பைபாஸ் சாலையில் உள்ள பட்டாசு கிடங்கில் திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பட்டாசு குடோனிலிருந்து லாரிக்கு பட்டாசுகளை ஏற்றும்போது உராய்வு ஏற்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டது. பட்டாசு குடோன் உரிமையாளர் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாததே இந்த தீவிபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. தீவிபத்தை தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த கடுமையாக போராடி வருகின்றனர். 

குடோன் அருகில் இருந்த கட்டடங்கள் மற்றும் ஸ்கேன் சென்டரிலும் தீ பரவியது. ஸ்கேன் சென்டரில் இருந்தவர்கள் தீவிபத்தில் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 9 பேர் பலியானார்கள். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. சிவகாசி மருத்துவமனையில், தீக்காயத்திற்கு சிகிச்சை அளிப்பதற்கான போதிய மருந்து இல்லை எனக்கூறப்படுகிறது. இதனால், காயமடைந்தவர்களை காப்பாற்ற டாக்டர்கள் போராடி வருகின்றனர். இந்தவிபத்தில் பலியானவர்கள் அனைவரும் ஸ்கேன் சென்டரில் இருந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

Comments