அன்புநாதனுக்கு முன்ஜாமின்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தினமலர் செய்தி : மதுரை: கரூர் அய்யம்பாளையத்தில், சில நாட்களுக்கு முன்னர் அன்புநாதன் என்பவரது வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து அன்புநாதன் தலைமறைவானார். தொடர்ந்து முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த ஐகோர்ட் கிளை, அன்புநாதனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. மேலும், கரூர் வேலாயுதம்பாளையத்தில் உள்ள போலீஸ் ஸ்டேசனில் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என உத்தரவிட்டது.

Comments