OneIndia News : திருச்சி: உள்ளாடையில் முதல்வர் ஜெயலலிதாவின் படம் ஒட்டியது போல, சமூக வலைதளத்தில் போட்டோவை வெளியிட்ட காரைக்குடி கணேஷ் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சரவணணை போலீசார் கைது செய்துள்ளனர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வழங்கப்படும் நிவாரண பொருட்களில், முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை ஒட்டுவதால் காலதாமதம் ஏற்படுகிறது என்று புகார்கள் எழுந்துள்ளன. தன்னார்வலர்கள் கொடுக்கும் நிவாரண பொருட்களிலும் ஜெயலலிதா போட்டோவை ஒட்டுவதற்கு அதிமுகவினர் கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, தகராறு செய்வோர் பற்றி தகவல் கொடுத்த அதிமுக தலைமை கழகம், போன் எண்களை வெளியிட்டுள்ளது. இந் நிலையில் கணேஷ் டெக்ஸ்டைல் உரிமையாளரான சரவணன், உள்ளாடையொன்றில், முதல்வர் படத்தை ஒட்டி வைத்தது போன்ற படத்தை சமூக தளங்களில் வெளியிட்டார். இதுகுறித்த தகவல் போலீசாருக்கு சென்றது. எனவே சரவணனை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.
Comments