டில்லியில் இருந்து ராகுல் சென்னை வந்தார் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்றார் . கிரிமாம்பாக்கம், சண்முகா நகர், ஈச்சங்காடு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து அரிசி, உடை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் அடங்கிய நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து கடலூருக்குச் சென்றார் , பின்னர் மேற்கு தாம்பரம், முடிச்சூர், வில்லிவாக்கம், ராயபுரம், தண்டையார்பேட்டை, கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார் அங்கிருந்த மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். நிவாரணம் பெற்ற மூதாட்டிகள் ராகுலுக்கு முத்தம் கொடுத்தும் அவரை வணங்கியும் சென்றனர். ராகுல் அந்த பெண்களுக்கு ஆறுதல் கூறினார் .
நிவாரணம் வழங்கிய பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில் ; நான் ஆறுதல் கூறவே வந்துள்ளேன். அரசியல் ரீதியான கேள்வி ஏதும் கேட்க வேண்டாம் என்றார் .நிவாரணம் வழங்குவதில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம். இக்கட்டான சூழலில் இருக்கும் மக்களுக்கு அனைவரும் உதவி செய்வதில் அக்கறை செலுத்த வேண்டும் என்றார் .
வில்லிவாக்கம் பகுதியில் வெள்ளத்தால் பாதித்த மக்களுக்க நிவாரணம் வழங்கி டில்லி புறப்பட்ட ராகுல் நிருபர்களிடம் பேசுகையில் : நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசுக்கு கூடுதல் பொறுப்பு உண்டு . பிரதமர் வெள்ளம் பாதித்த மக்களுக்கு உதவி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். பின்னர் டில்லி திரும்பி சென்றார்.
Comments