வீடியோ பாடல் மூலம் சென்னைக்கு ஆறுதல் கூறிய தெலுங்கு திரையுலகம் (வீடியோ இணைப்பு)

OneIndia News : சென்னை: சென்னையில் ஏற்பட்ட மழை, வெள்ளத்திற்கு தெலுங்கு திரையுலகினர் இணைந்து பெருமளவில் உதவி செய்துள்ளனர். இந்நிலையில் சென்னை வெள்ளத்திற்கு நிதி திரட்ட பாடல் ஒன்றினை வடிவமைத்து வெளியிட்டுள்ளனர்.

சென்னை மக்களுக்காக தெலுங்கு திரை உலகத்தினர் தாராளமாக நிதி மற்றும் பொருள் உதவி செய்தார்கள். லட்சக்கணக்கில் நடிகர்கள் நிதி வழங்கினார்கள். "சென்னைக்காக நாம்" என்ற பெயரில் நிவாரண பொருட்களை திரட்டி லாரி லாரியாக அனுப்பி வைத்தனர். இதில் அனைத்து தெலுங்கு நடிகர், நடிகைகள் திரை உலகினர் கலந்து கொண்டனர். இப்போது "சென்னையை ஆதரிப்போம்" என்ற பெயரில் தெலுங்கு நடிகர்கள், பாடகர்கள், பாடகிகள் இணைந்து இசை ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ளனர். சென்னை நகர மக்களின் துயரத்தில் பங்கேற்போம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோம் என்று ஆறுதல் கூறும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது.
இதில் தெலுங்கு பிரபல பாடகர்கள், நடிகர்கள் திரட்டும் நிவாரண உதவி, சென்னை நகர மக்கள் வெள்ளத்தில் தவித்த காட்சி. அவர்களை ராணுவம் மீட்டது. மற்றவர்கள் உதவி செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Comments