தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

தினமலர் செய்தி : சென்னை : குமரி அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையால், தென்தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்டவைகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என்றும், சென்னையில் மிதமான மழைக்கு மட்டுமே வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தை பொறுத்த வரை அதிகபட்சமாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 22 செமீ, மழை பெய்துள்ளது. தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் 9 செமீ,ம், திருத்துறைப்பூண்டி, பேராவூரணி, முத்துப்பேட்டை, பாபநாசம் அணைப் பகுதி ஆகியவற்றில் தலா 8 செமீ,ம் மழையும் பெய்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைத் தவிர தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வடமாவட்டங்களில் படிப்படியாக மழை குறையும். சென்னையில் இடைவெளி விட்டு ஓரிரு முறை மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Comments