'வெள்ள சேதங்களால், நீங்கள் அடைந்துள்ள துயரத்தை நினைத்து, நினைத்து நான் வருந்துகிறேன்' - சொல்வது யார்; முதல்வர் ஜெயலலிதா. அது மட்டுமா; உங்களுக்கு வரும் துன்பங்களை எல்லாம் நானே சுமக்கிறேன். எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது; உறவினர் கிடையாது; எனக்கு எல்லாமும் நீங்கள் தான் என, முதல்வர், 'வாட்ஸ் ஆப்' மூலம் பேசியிருக்கிறார்.
மக்களின் துன்பங்களை துடைக்க, அவர்கள் தங்கியிருக்கிற முகாம்களுக்கு சென்று பார்த்தாரா; 'அம்மா' என்ற ஒரு சொல்லுக்காகவே, என் வாழ் நாட்களை உங்களுக்காக, அர்ப்பணித்து உழைத்து கொண்டிருக்கிறேன் என்கிறார் ஜெயலலிதா.அம்மா உணவகம், குடிநீர் என பல திட்டங்களுக்கு, 'அம்மா' பெயர் வைத்துக் கொள்ள தான், தன்னை அர்ப்பணித்து உழைக்கிறார்.
எப்படிப்பட்ட உழைப்பு; எத்தனை மணி நேர உழைப்பு; அவருக்கென சுயநலம் அறவே கிடையாதாம்; கேட்பவர்களே, நம்ப முயற்சி செய்யுங்கள்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
இந்நிலையில், சேலத்தில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் ராமகிருஷ்ணன், கருணாநிதிக்கு விடுத்துள்ள கேள்வியில், 'சகாயம் தலைமையிலான குழு, கிரானைட் ஊழலில் அரசியல் வாதிகளுக்கும் தொடர்பு உள்ளது என கூறியுள்ளது. ஆனால், நித்தம் அறிக்கை வெளியிடும் கருணாநிதி, இதுகுறித்து வாய் திறக்காமல் மவுனம் சாதிப்பது ஏன்?' என, கேள்வி எழுப்பியுள்ளார்.
Comments