தன்னார்வலர்களை மிரட்டும் அதிமுகவினர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காதது வெட்கம்... விஜயகாந்த்

Vijayakanth condemn AIDMK cadres who threaten the volunteersOneIndia News : சென்னை: மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவி செய்ய வரும் தன்னார்வலர்களை மிரட்டும் அ.தி.மு.க.வினர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வெட்கக்கேடானது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவ முன்வரும் தன்னார்வலர்களை அதிமுக கவுன்சிலர்களும், வட்டச் செயலாளர்களும் மிரட்டி, அதை அவர்களிடமிருந்து பறித்து ஜெயலலிதா படத்தையும், கட்சி சின்னத்தையும் வைத்து அதிமுக செய்தது போன்ற நாடகத்தை அரங்கேற்றி கொண்டிருக்கிறார்கள். இந்த அவலம் தொலைக்காட்சியிலும், சமூக வளைதலங்களிலும் வெளியாகி வருகிறது. சென்னையில் மாநகராட்சி என்ற உள்ளாட்சியமைப்பு செயல்படுகிறதா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது. சம்பந்தப்பட்டோர் மீது காவல் துறை இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வெட்கக்கேடானது என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Comments