OneIndia News : சென்னை: சென்னை பள்ளிக்கரணை பகுதியில் நள்ளிரவில் வீடு வீடாக வந்த அதிமுகவினர் ரூ. 2000 நிவாரண உதவிகளைத் தருவதாக கூறி எம்ஜிஆர் படம் போட்ட பச்சை நிற டோக்கனை கொடுத்துச் சென்றுள்ளதாக பரபரப்பு கிளம்பியுள்ளது. இந்த டோக்கன்களை பொதுமக்கள் இன்று காலை கூடி தீவைத்து எரித்தனர். சென்னையை உலுக்கிய மழை வெள்ளத்தில் சிக்கி இன்னும் கூட மீள முடியாமல் பெரும் துயரத்தில் உள்ளனர் மக்கள். ஆனால் இதிலும் அரசியலைக் கலந்து மக்களைப் பாடாய்ப்படுத்தி வருகின்றனர் இந்த பாழாய்ப் போன அரசியல்வாதிகள்.
அவரவருக்குத் தேவையான அளவுக்கு இந்த மழை வெள்ள பாதிப்பை பயன்படுத்தி ஆதாயம் கண்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிமுகவினர் டோக்கன் கொடுத்ததாக ஒரு புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. சென்னை வெள்ளத்தில் சிக்கி இன்னும் கூட மீள முடியாமல் பகுதிகளில் ஒன்று பள்ளிக்கரணை. இப்பகுதியில் நேற்று இரவு ஒரு குரூப் வீடு வீடாக வந்துள்ளது. ரூ. 2000 மதிப்புள்ள நிவாரணம் தருவதாக சொல்லி ஜெயலலிதா, எம்ஜிஆர் படம் போட்ட பச்சை கலர் டோக்கனை தந்துவிட்டுப் போயினர் நள்ளிரவு 1 மணிக்கு, ஏதோ திருடர்கள் போல வந்த இக்கும்பல், வீட்டுக் கதவைத் தட்டி ஒரு பிரட், 150 ரூபா சேலை, வாட்டர் கேன், ஒரு 40 ரூபா துண்டு கொடுத்தனர். இது தான் 2000 ரூபாய் நிவாரணமா என்று மக்கள் கேட்டதையடுத்து இப்போதைக்கு இதை வச்சுகுங்க என்று கூறிவிட்டு ஓடிவிட்டனராம். இன்று காலை அப்பகுதி மக்கள் கூடி அதிமுகவி்னரின் ஏமாற்று வேலையைக் கண்டித்து கோஷமிட்டதோடு, ஜெயலலிதா எம்ஜிஆர் படம் போட்ட டோக்கன்களைத் தீ வைத்து எரித்தனர். ஓட்டு கேட்க வாங்க..அப்ப பார்த்துக்கிறோம் என்றும் ஆவேசமாக கூறினர். கலைந்தனர் இதுகுறித்து ஒரு பெண் கூறுகையில், ரூ. 2000 நிவாரணம் என்று கூறி விட்டு 300 ரூபாய்க்கு தந்து விட்டுச் செல்கின்றனர். இதைக் கொடுக்காமலேயே இருந்திருக்லாம். எதுக்கு மிட் நைட்ல கொள்ளைக்காரனுக மாதிரி வர்றானுக.. பகல்ல வர வேண்டியது தானே... என்றார் கோபமாக.
Comments