OneIndia News : சென்னை: பெங்களூரில் இருந்து நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்னைக்கு வரும் லாரிகளை சோதனைச்சாவடிகளில் நிறித்தி அவற்றில் அதிமுக போஸ்டர்களை ஒட்டுமாறு கூறி அடாவடி நடப்பதை ஒருவர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
It is pathetic to see ADMK people branding the flood relief materials with 'AMMA' sticker. When the whole Tamil Nadu is...
Posted by Srinivas Aravind on Friday, December 4, 2015
சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களுக்காக பெங்களூர் மக்கள் நிவாரணப் பொருட்களை சேகரித்து லாரிகளில் அனுப்பி வைத்து வருகிறார்கள். தொடர்ந்து நிவாரணப் பொருட்களை சேகரித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பெங்களூரில் இருந்து சென்னைக்கு நிவாரணப் பொருட்களுடன் வரும் லாரிகளை அதிமுகவினர் மாநில எல்லையில் தடுத்து நிறுத்தி அவற்றில் அதிமுக போஸ்டர்கள், அம்மா ஸ்டிக்கர்களை ஒட்டுமாறு அடவாடி செய்து வருகின்றனர். அரசு நிவாரணம் வழங்கவில்லை என்று மக்கள் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அப்படி இருக்கையில் நிவாரணம் அளிப்பவர்களையும் அதிமுகவினர் தடுத்து நிறுத்தி அம்மா ஸ்டிக்கர்களை ஒட்டிவிடுகிறார்கள். அவர்களின் ஸ்டிக்கர் ஒட்டும் பணியால் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து செயின்ட் ஹில் என்பவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
பெங்களூரில் சகோதரருடன் பணிபுரிபவர்கள் நிவாரணப் பொருட்களுடன் லாரியில் சென்னைக்கு சென்றுள்ளனர். ஆனால் சோதனைச்சாவடிகளில் லாரியை நிறுத்தி அதிமுக போஸ்டர்களை ஒட்டுமாறு அடாவடி செய்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
Comments