ஆனால், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பறக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, இந்த மூன்று மாவட்டங்களை நாளை (வியாழக்கிழமை) காலை முதல்வர் ஜெயலலிதா பார்வையிடுகிறார். வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப் பணியின் 13 குழுக்களைச் சார்ந்த 520 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், 15 குழுக்களை மற்ற மாநிலங்களில் இருந்து அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புப் படையின் 6 குழுவினரும், கடலோர பாதுகாப்பு படையைச் சார்ந்த 3 குழுக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. 126 மோட்டார் படகுகள், 74 சாதாரண படகுகள் என மொத்தம் 200 படகுகள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், 50 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன'' என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் ஜெயலலிதாவும், பிரதமர் நரேந்திர மோடியும் ஹெலிகாப்டர் மூலம் நாளை பார்வையிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments