பீப் பாடல் விவகாரத்தில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணையில், சிம்புவுக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கு விசாரணை பிற்பகலில் மீண்டும் வழக்கை விசாரித்ததில் ஜனவரி 4-ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார் நீதிபதி. அதே நேரம் பீப் பாடலை பாடிய நடிகர் சிம்புவைக் கைது செய்ய எந்தவித தடையும் இல்லை என சென்னை நீதிபதி ராஜேந்திரன் அதிரடி உத்தரவிட்டார். இதனால் சிம்பு எந்த நேரமும் கைதாகும் சூழல் உருவாகியுள்ளது. இதனிடையே கடந்த பத்து நாட்களாக தலைமறைவாக இருக்கும் சிம்பு, தனக்கு எந்த பயமும் இல்லை என்றும், சட்ட நடவடிக்கைகளைச் சந்திப்பேன் என்றும் கூறி வருகிறார். போலீஸின் கைது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பாரா அல்லது இப்போதுள்ள தலைமறைவு வாழ்க்கையைத் தொடர்வாரா என்பது இன்று நள்ளிரவோ நாளையோ தெரிந்துவிடும்.
Comments