மேலும் சிம்பு, அனிருத்தின் பீப் பாடலை அவர் உணவு இடைவேளையின்போது கேட்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் அரசுத் தரப்பில். பிற்பகலுக்குப் பிறகு நடந்த விசாரணையின்போது, சிம்புவுக்கு முன் ஜாமீன் தரக்கூடாது என்று அரசுத் தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மகளிர் அமைப்புகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களும் சிம்புவுக்கு ஜாமீன் தரக்கூடாது என்றனர். பின்னர் இந்த வழக்கை வரும் ஜனவரி 4-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தார் நீதிபதி. சிம்பு விசாரணைக்காக நேரில் ஆஜராக போலீசார் குறிப்பிட்டிருந்த டிசம்பர் 30 ம் தேதியை, ஜனவரி 4 வரை நீட்டிக்கலாம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார். அதே நேரம், போலீசார் சிம்புவைக் கைது செய்ய எவ்விதத் தடையும் இல்லை என்றால், தேவைப்பட்டால் எந்த நேரமும் போலீசார் கைது செய்யலாம் என்றும் உத்தவிட்டார். அனிருத் தகரப்பில் முன்ஜாமீன் மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. அவரும் இந்தப் புகார் குறித்த விசாரணைக்கு வரவேண்டும் என கோவை மற்றும் சென்னை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆகவே அனிருத்தைக் கைது செய்யவும் போலீசுக்கு எந்தத் தடையும் இல்லை. எனவே கனடாவிலிருந்து அவரை சென்னை திரும்ப போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் சார்பில் ஆஜரான வக்கீல்கள் தெரிவித்தனர்.
Comments