இதேபோல் இன்று தஞ்சாவூரில் மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்கக் கோரி தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து விஜயகாந்த் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென ஏனோ நிலைதடுமாறி, பேருந்து நிறுத்தத்தில் ஒரு ஜெயலலிதா படம் இருக்கிறது.. அதை கிழிங்கடா என சொல்ல.. அவரது அடிப்பொடிகளும் அந்த படத்தை கிழித்து எறிந்தனர். இந்த செய்தியை கேள்விபட்ட அதிமுகவினர் அங்கு திரண்டனர். தேமுதிகவின் ஆர்ப்பாட்டத்துக்கான பேனர், கொடிகள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கிழித்து தீ வைத்து எரித்தனர் அதிமுகவினர். தடுக்க வந்த போலீசாரை விரட்டிவிட்டு தேமுதிக கொடிகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் தஞ்சாவூரில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூரில் விஜயகாந்த் இருக்கும் நிலையில் அவருக்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்தி அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்துவிடாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜயகாந்த், டெல்டா மாவட்ட விவசாயிகளை அதிமுக அரசு புறக்கணிக்கிறது; மீத்தேன் திட்டத்துக்கு காரணமே கருணாநிதி அரசுதான் என்று வழக்கம்போல வசைபாடினார்.
Comments