சென்னைவாசிகளே செல்போன் ரீசார்ஜ் செய்ய முடியாமல் தவிக்கிறீர்களா? கவலைய விடுங்க

Airtel offering free talktime to flood-affected customers in ChennaiOneIndia News : சென்னை: வெள்ளத்தால் தவிக்கும் சென்னை மக்கள் ரீசார்ஜ் செய்வது கஷ்டம் என்பதால், செல்போன் நிறுவனங்கள், அவர்களுக்கு கடனாக ரீசார்ஜ் செய்து கொடுக்க முன்வந்துள்ளன. இந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஏர்டெல் தனது ப்ரீப்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ.30க்கான ரீசார்ஜை கடனாக செய்துதரும். இதற்கு இரு நாட்கள் வேலிடிட்டி இருக்கும். அவசர தேவைக்காக 30 எம்.பி அளவுக்கு செல்போன் இணையதள டேட்டாவும் வழங்கப்படும்.

போஸ்ட் பெய்டு கஸ்டமர்கள், மற்றும் லேண்ட் லைன் கஸ்டமர்கள், பில் தொகையை செலுத்த வேண்டிய காலம் கடந்தும் கட்டிக்கொள்ளலாம். அபராதம் கிடைாயது. சென்னையில் தொலைதொடர்பு வசதி பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏர்டெல் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். பிரச்சினை இருக்கும் பகுதிகளில் அது சரி செய்யப்படும். இவ்வாறு ஏர்டெல் கூறியுள்ளது. வேண்டியவர்களுக்கு தங்கள் மூலமாக நண்பர்களோ, உறவினர்களோ ரீசார்ஜ் செய்து உதவலாம் என பேடிஎம் நிறுவனம், அறிவித்துள்ளது. ஐடியா ரூ.10 அளவுக்கு ரீசார்ஜ் கடன் தருவதாக அறிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிய அந்தந்த செல்போன் நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை மைய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

இவைபோக, தேவைப்படுவோர் எங்களை தொடர்புகொண்டால் ரீசார்ஜ் செய்து தருவோம் என்று பல டிவிட்டர்வாசிகள் உதவிக்கரம் நீட்டி டிவிட் செய்து வருகிறார்கள்.

Comments