கெஜ்ரிவாலுக்கு சோதனை மேல் சோதனை ; முதல்வர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு

தினமலர் செய்தி : புதுடில்லி: டில்லி முதல்வர் அலுவலகத்தில் சிபிஐ, அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர் ,ரெய்டுக்கான காரணம் ஏதும் வெளியிடப் படவில்லை அதே நேரத்தில் இது அரசியல் பழிவாங்கும் செயல் என கெஜ்ரிவால் கண்டித்துள்ளார் .டில்லியில் நேற்று ஆக்கிரமிப்பு அகற்றிய விவகாரம் விஸ்வரூபமெடுத்தது இது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியது ,இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ள இன்று டில்லி முதல்வர் கெஜ்ரிவால் அலுவலகம் அமைந்துள்ள தலைமைசெயலக 3 வது மாடியில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர், இதன் காரணமாக இந்த 3வது தளம் முழுவதும் சீல் வைக்கப்பட்டது ,யாரும் நுழைய அனுமதிக்கப்படவில்லை, இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

காலையில் தமது அலுவலகம் புறப்பட்டு கொண்டிருக்கும் போது கெஜ்ரிவாலுக்கு இந்த சோதனை குறித்து தெரிய வந்தது இதனால் அதிர்ச்சி அடைந்த கெஜ்ரிவால் இது அரசியில் ரீதியாக எதிர்கொள்ள முடியாத மோடி அரசின் கோழைத்தனமான செயல் என தனது டுவிட்டரில் கண்டித்தார்.

சி.பி.ஐ., விளக்கம் : இந்த ரெய்டு குறித்து சி.பி.ஐ., தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில் ; முதல்வர் கெஜ்ரிவால் அலுவலகத்தில் நாங்கள் எந்த சோதனையும் நடத்தவில்லை .அதே நேரத்தில் 3 வது மாடியில் செயல்படும் டில்லி முதல்வரின் முதன்மை செயலர் ராஜேந்திரகுமார் மீது சில குற்றச்சசாட்டுக்கள் உள்ளது .இது தொடர்பாகவே ரெய்டு நடத்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments