டிவி யில் நட்ராஜ் முன்னாள் டிஜிபி என்று பெயர் போட்டு புகைப்படத்தை ஒளிபரப்பினர். அப்போது இந்த பேட்டியை கேட்ட அதிமுகவினர் பலரும், நடராஜ் மீது கோபப்பட்டனர். எவ்வளவோ பேர் சீனியாரிட்டியில் இருந்தும் அம்மா, இவருக்கு தேர்வாணைய தலைவர் பதவியை கொடுத்தார் முதல்வர். ஆனா அதையெல்லாம் மறந்து விட்டு இப்படி பேசலாமா என்று சொல்லி அதிமுக தலைமைக்கு போன் மூலமாகவும், வாட்ஸ் அப் வாயிலாகவும் புகார்களை தட்டிவிட்டனர். சிலர் அந்த பேட்டியின் ஆடியோவையே அனுப்பி வைத்தனர்.
இதனை கேட்ட உடனேயே கோபத்தின் உச்சிக்குப் போன முதல்வர் ஜெயலலிதா உடனடியாக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் டிஜிபி நடராஜை நீக்கி உத்தரவிட்டார். அதிமுகவை பொருத்தவரை கட்சிக்கு எதிராக செயல்படுபவர்களைப் பற்றி விசாரித்துதான் நடவடிக்கை எடுப்பார் என்றும், மாநில உளவுத்துறையின் கருத்துக்களை கேட்டுதான் செயல்படுவார் என்றும் கூறப்பட்ட நிலையில், நட்ராஜ் நீக்கத்தின் போது முதல்வர், உளவுத்துறையின் கருத்தை கேட்கவில்லையாம்.
எந்த அளவிற்கு நம்பினோம் இப்படி நம்பிக்கை துரோகம் செய்து விட்டாரே என்ற கோபத்தின் வேகத்தால் ஜெயலலிதா தானே ஒரு முடிவுக்கு வந்து விட்டார் என்றும் கூறுகின்றனர். எனவேதான் நடராஜ் விசயத்தில் அவசரப்பட்டு முதல்வர் ஜெயலலிதா முடிவு எடுத்து விட்டதாக கூறுகின்றனர். அதே நேரத்தில் உளவுத்துறையிடம் இருந்து கருத்து அறிக்க வாங்காமல் ஜெயலலிதா இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்திருக்க வாய்ப்பே இல்லை என்கிறார்கள். ஏனெனில் டிஜிபியாக நடராஜ் இருந்தபோது அவரால் பாதிக்கப்பட்டவர்கள்தான் இதனை போட்டு கொடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே தன்னைப்பற்றிய தவறான புரிதலால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட டிவி சேனலை தொடர்பு கொண்டு கண்டனம் தெரிவித்துள்ளார் நட்ராஜ். இதனையடுத்து டிவி நிறுவனம், நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து கடிதம் அளித்துள்ளதோடு அந்த நிகழ்ச்சியில் இருந்த செம்பரம்பாக்கம் பற்றிய டெலிபோன் பேச்சு கருத்தையே நீக்கிவிட்டது.
அதே நேரத்தில் நடந்த சம்பவம் பற்றி விளக்கம் தர கட்சி தலைமையின் அனுமதி கேட்டு காத்திருக்கிறாராம் நட்ராஜ். அவரது விளக்கத்தை அதிமுக ஏற்றுக்கொண்டு மீண்டும் நட்ராஜூக்கு பொறுப்பு வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
முன்னாள் டிஜிபி நடராஜை நீக்குவதற்கு முன்பாக கொஞ்சம் தீர விசாரித்திருக்கலாம் என்கிறார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், முன்னாள் அதிமுக எம்.பியுமான மலைச்சாமி. கடந்த ஆண்டு அதிமுக - பாஜக பற்றி டிவி சேனல் ஒன்றில் கருத்து கூறியதாலேயே இவரை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா. இப்போது இவர் பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments