தினமலர் செய்தி : சென்னை: 'கன்னியாகுமரி, நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில், இரு நாட்களுக்கு கன மழை பெய்யலாம்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இதுகுறித்து வெளியாகி யுள்ள அறிக்கை:குமரி கடல் மற்றும் இலங்கையின் அருகே மையம் கொண்டிருந்த, காற்று மேலடுக்கு சுழற்சி வலுவிழந்து வருகிறது. இருந்தாலும், கன்னியாகுமரி, நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களில், இன்று முதல் இரு நாட்களுக்கு, கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
Comments