ரிங் அடிச்சாச்சு ., தேர்தல் கமிஷன் ; அதிகாரிகள் மாற்றமே முதல் பணி

தினமலர் செய்தி : சென்னை: தமிழகத்தில் நடப்பு சட்டசபை முடிவுக்கு வர இன்னும் சில மாதங்களே இருப்பதால் எப்போது தேர்தல் வரும் என்ற எதிர்பார்ப்பு மாநிலத்தில் நிலவ துவங்கியிருக்கிறது. அரசியல் கட்சிகள் தங்களின் பணிகளை முன்கூட்டியே துவக்கினாலும் தேர்தல் கமிஷன் களம் இறங்கினால் தேர்தல் கல, கலப்பை பார்க்க முடியும். தேர்தலை உறுதி செய்யும் வகையில் முதன் முதல் பணியாக மாநிலத்தில் உள்ள அதிகாரிகளை மாற்றம் செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது .

இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறியதாவது: தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன .முதலில் வாக்காளர் பட்டியல் தொடர்பான பணியில் கவனம் செலுத்துவோம். இறுதி பட்டியல் வரும் ஜனவரி மாதம் 20ம் தேதி வெளியிடப்படும், இதன் பின்னர் வாக்காளர் சேர்ப்பு நீக்கம் சம்பந்தமாக வாய்ப்பும் வழங்கப்படும். டில்லியில் இருந்து தலைமை தேர்தல் ஆணையர்கள் வரும் பிப்ரவரிக்குள் ளோ அல்லது முன்னதாகவோ வர வாய்ப்பு இருக்கிறது. வாக்காளர் பட்டியல் தொடர்பான பணிகள் முடிந்த பின்னர் தான் காவல் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை இட மாற்றம் செய்ய முடியும். வரும் ஜனவரி மாதம் 20 ம் தேதிக்கு பின்னர் அதிகாரிகளை இட மாற்றம் செய்ய தலைமை கமிஷன் யோசனை தொடர்பாக தலைமை செயலருக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளோம். அதில் 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றி இருந்தால் அந்த அதிகாரிகளை இட மாற்றம் செய்ய வேண்டும். என்று அறிவுறுத்தியுள்ளோம் .எனவே மூன்று ஆண்டுகளுக்கு மேல் ( 31.05-2016) வரையிலான காலத்திற்குள் பணியாற்றியது ஒரே இடமாக இருந்தால் பணியாற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளோம். இவ்வாறு லக்கானி கூறினார் . தமிழக சட்டசபை தேர்தல் தேதி தொடர்பாக வாட்ஸ் அப்பில் பரவிய தகவல் குறித்து நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்தார் . 

காதை பிளக்கும் ஸ்பீக்கர் : அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பாக பல வேகமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. தற்போது தேர்தல் கமிஷனின் அதிகாரிகள் மாற்றம் விரைவில் இருக்கும். அடுத்து ஒவ்வொரு பணியாக துவங்கும் ஆக தேர்தல் கல கலப்பு துவக்க போகுது , காதை பிளக்கும் ஸ்பீக்கர் இல்லாமல் இருந்தால் சரி தான் !

Comments