தனித்தீவானது சென்னை

தினமலர் செய்தி : சென்னை: தகவல் தொடர்பு சாதனங்கள், போக்குவரத்து வசதிகள் துண்டிக்கப் பட்டுள்ளதால், தனித்தீவாக மாறியுள்ளது சென்னை. எவ்வித உதவியும் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். நகரமே ஸ்தம்பித்துள்ளது.

*சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் செல்போன்களை சார்ஜ் செய்ய முடியவில்லை. அங்கு வசிப்பவர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களை தொடர்புகொள்ள முடியவில்லை.

*பெரும்பாாலன கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பால் காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியவில்லை. ஓட்டல்கள் மூடப்பட்டன. இதனால்உணவு கிடைக்காமல் பலர் சிரமப்படுகின்றனர்.

*சென்னைக்கு வரும் 12 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

பாண்டியன்- திண்டுக்கல் ரயில் நெல்லை -சென்னை ரயில் , கன்னியாகுமரி -சென்னை ரயில், குருவாயூர்- சென்னை உள்ளிட்ட 15 ரயில்கள் காட்பாடி வழியாக திருப்பிவிடப்பட்டன.

*செம்பரப்பாக்கம், புழல், பூண்டி, மதுராந்தகம் ஏரிகளில் இருந்து தொடர்ந்து பல ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டுள்ளதால், ஜி.எஸ்.டி., சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது
* பல சாலைகளில் அடையாறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வாகனங்கள் ஆங்காங்கே ஸ்தம்பித்துள்ளன. வேலைக்கு சென்ற பலர் மணிக்கணக்காக வீடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.

*கனமழையால் தாம்பரம், முடிச்சூர், குரோம்பேட்டை, சைதாப்பேட்டை பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

*சுரங்கப்பாதைகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. நகரம் முழுவதும் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

*வாகனங்கள் மட்டுமல்லாமல், நடந்துகூட யாரும் செல்ல முடியவில்லை.

*சென்னையில் உள்ளவர்கள் மற்ற மாவட்டங்களில் உள்ள உறவினர்கள், நண்பர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. மற்ற தகவல் தொடர்பு சாதனங்களும் செயல் இழந்துள்ளன.

*மறைமலைநகரில் உள்ள அனைத்து ஐ.டி., நிறுவனங்களிலும் மழைநீர் புகுந்துள்ளது.

*சென்னைக்கு உள்ளேயே பல பகுதிகள் தனித்தனியாக துண்டிக்கப்பட்டுள்ளன.

*கிட்டத்தட்ட தனித்தீவு நிலைக்கு சென்னை தள்ளப்பட்டுள்ளது.

Comments