போலீஸ் கமிஷனரான 8 வயது சிறுவன்

தினமலர் செய்தி : ஐதராபாத் : தலாசீமியா நோயினால் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு 25 நாட்களுக்கும் ஒருமுறை, ரத்தம் ஏற்றக்கூடிய பாதிப்பில் சிக்கியிருந்த 8 வயது சிறுவன் மடிப்பள்ளி ரூப் அவுரோனாவின் போலீஸ் கமிஷனர் ஆசை நிறைவேறியுள்ளது. 2 வது படிக்கும் ரூப், தனது போலீஸ் கமிஷனர் ஆசையை, ஐதராபாத் போலீஸ் கமிஷனருக்கு எழுதியிருந்தார். இதனையடுத்து, நேற்று (15ம் தேதி) அவரது ஆசை நிறைவேறியுள்ளது. நேற்று அவர் ஐதராபாத் போலீஸ் கமிஷனராக பதவிவகித்துள்ளார்.

Comments