60 ஆண்டு கால கருப்புப் பண புள்ளிகளை முதல் முறையாக அம்பலப்படுத்திய சுவிட்சர்லாந்து

Swiss publish list of dormant bank accounts for first timeOneIndia News : ஜெனீவா: தனது நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ளவர்கள் குறித்த விவரத்தை சுவிட்சர்லாந்து இதுவரை வெளியில் சொன்னதே இல்லை. இந்த நிலையில் முதல் முறையாக 2600 பேரின் பெயர் கணக்கு விவரங்களை அது வெளியிட்டுள்ளது. இந்த 2600 பேரின் கணக்குகளும் நீண்ட காலமாக செயல்படாமல் உள்ளவையாகும். இவர்களின் வாரிசுகளுக்கு இந்த கணக்கு குறித்த விவரம் தெரிந்து அவர்கள் அந்தப் பணப் பயனை அடைய முடியும் என்பதற்காக இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது சுவிஸ் அரசு.

இந்தப் பட்டியலில் தனி நபர்கள், நிறுவனங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த 60 வருடமாக இந்தக் கணக்குகள் இங்குள்ள வங்கிகளில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. www.dormantaccounts.ch என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் இடம் பெற்றுள்ளது. இந்த கணக்குகளின் மொத்த மதிப்பு 44 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் 296 கோடியே 78 லட்சத்து 92 ஆயிரத்து 903 ரூபாய் ஆகும். இதுதவிர 80 சேப் டெபாசிட் பாக்ஸ் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த கணக்குகளுக்கு உரியோர் இன்னும் ஒரு வருட காலத்திற்குள் உரிய வங்கி நிர்வாகத்தை அணுகி இப்பணத்தை உரியை முறையில் நிரூபித்துப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments