இந்நிலையில் வெள்ளம் பாதித்த சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை நேற்று பிற்பகல் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட தேவையான ஏற்பாடுகளை செய்யும்படி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். ஆனால் மோசமான வானிலை காரணமாக விமானப் படை விமானிகள் ஹெலிகாப்டர் பறக்க இயலாது என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் ஜெயலலிதா இன்று 3 மணிநேரம் ஆய்வு செய்தார்.
பிரதமரும் வருகை இதனிடையே வெள்ளம் பாதித்த தமிழக பகுதிகளை ஆய்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை தர உள்ளார். அரக்கோணம் கடற்படை விமான தளத்துக்கு வருகை தரும் அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட உள்ளார்.
Comments