பொதுவாக இணையதள வாக்கெடுபில் ஒருவர் பல முறை வாக்களித்திருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கும். ஆனால், நாங்கள் இதில் ஒரு புது உக்தியில் புகுத்திருந்தோம். அதாவது, ஒருவர் எத்தனை முறை வாக்களித்து இருந்தாலும் அவரின் மொபைல், கம்ப்யூட்டர் எண்ணை (IP அட்ரஸ்) வைத்து அவர் போட்டு இருந்த போலி வாக்குகளை நீக்கி, உண்மையாக அவர் எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்று கணக்கிட்டு இந்த கருத்து கணிப்பு முடிவை தெளிவாக அறிவித்து இருக்கிறோம்.
அதன் விவரம் வருமாறு...
வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கையில் அதிமுக அரசின் செயல்பாடுகள் எப்படி இருந்தது என்ற கேள்விக்கு படு மோசமாக இருந்தது என்று 81% மக்கள் தங்களின் கோபத்தை வெளிகாட்டி இருக்கிறார்கள். ஒன்றும் சொல்லும்படி இல்லை என்று 7% பேரும், பாராட்டும் வகையில் இருந்தது என்று 12% பேரும் தங்களின் கருத்தை பதிவு செய்து இருக்கிறார்கள். ஒட்டு மொத்தமாக அதிமுக அரசின் செயல்பாட்டை 88% பேர் சரியில்லை என்றே சொல்லி இருக்கிறார்கள்.
வெள்ள நிவாரண பணியில் உங்களை கவர்ந்த கட்சி எது என்ற கேள்விக்கு திமுக என்று 66% பேரும், அதிமுக என்று 9% பேரும், மற்றவர்கள் என்று 8% பேரும், தேமுதிக என்று 6% பேரும், பாமக என்று 4% பேரும், மதிமுக என்று 3% பேரும், யாருமே இல்லை என்று 3% பேரும் கூறி இருக்கிறார்கள்.
தற்பொழுதைய சூழ்நிலையில் தேர்தல் வந்தால் நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு திமுக என்று 72% பேரும், அதிமுக என்று வெறும் 12% பேரும், தேமுதிக என்று 5% பேரும், பாமக என்று 4% பேரும், மதிமுக என்று 3% பேரும் சொல்லிருக்கிறார்கள்.
இதன் படி, வரும் சட்டமன்ற பொது தேர்தலில் திமுக சுமார் 170-180 தொகுதிகளும், அதிமுக 30-40 தொகுதிகளும், மற்றவை 35-40 தொகுதிகளிலும் வெற்றி பெரும். இது இந்த கட்சிகளின் தனி பட்ட செல்வாக்கில் கிடைக்கும் தொகுதிகள். இந்த எண்ணிக்கை கூட்டணிகள் உறுதியான பிறகு மாறலாம்.
2016-ல் தமிழக முதல்வர் யார் என்ற கேள்விக்கு கலைஞர் / ஸ்டாலின் தான் என்று 74% பேரும், ஜெயலலிதா 12%, விஜயகாந்த் 6%, அன்பு மணி ராமதாஸ் 5%, வைகோ 3% மக்களும் வாக்களித் திருக்கிறார்கள். சமீபகாலமாக இவரின் செயல்பாடுகளின் பிரதிபலிப்பே இவரின் செல்வாக்கு குறைந்ததாக கருத்த படுகிறது.
அதிமுக அரசிற்கு நீங்கள் தரும் மதிப்பெண் எவ்வளவு என்ற கேள்விக்கு 0 மட்டுமே என்று 72% பேரும், 35 மதிப்பெண் என்று 15%, 50 மதிப்பெண் என்று 4% பேரும், 90 மதிப்பெண் என்று 5% பேரும், 100 மதிப்பெண் என்று 4% பேரும் கூறி இருக்கிறார்கள். ஒட்டு மொத்தமாக 87% பேர் தங்களின் அதிர்ப்தியை வெளிபடுத்தி இருக்கிறார்கள்.
இந்த வெள்ள நிவாரண நடவடிக்கையில் அதிகம் விமர்சனத்திற்கு உள்ளானது நிவாரண பொருளில் "அம்மா ஸ்டிக்கர்". இது மோசமான செயல் என்று 89% பேரும், இதில் என்ன தவறு இருக்கு என்று 11% பேரும் சொல்லி இருக்கிறார்கள்.
அதிமுக அரசு "செயல்படாத அரசு" என்று எதிர்கட்சிகள் சொல்வது முற்றிலும் உண்மை என்று 88% பேரும், பொய் என்று 12% பேரும் சொல்லி இருக்கிறார்கள்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கும் நிலையில் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பு மக்களின் மனதில் வெள்ள பேரிடர் பேரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது, மேலும், ஆட்சி மாற்றத்தை விரும்பும் எண்ணத்தை அதிகரிக்க செய்து இருப்பது பிரதிபலிக்கிறது. கூட்டணி, அதிமுக அரசின் இந்த எஞ்சிய கால ஆட்சியின் செயல்பாடுகளை பொறுத்து மேற்குறிய எண்ணிக்கைகளில் வேறுபாடு ஏற்படலாம். இருந்தும் ஆட்சி மாற்றம் நிச்சயம் என்பதையே இந்த கருத்து கணிப்பு உறுதி செய்திருக்கிறது.
Comments