டில்லி விமான விபத்து ; பாதுகாப்பு படை அதிகாரிகள் உள்பட 10 பேர் பலி

தினமலர் செய்தி : புதுடில்லி: டில்லியில் துவாரகா மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் அருகே தரையிறங்கும் போது விமானம் சுவற்றில் மோதி தீ பிடித்து எரிந்தது. இதில் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உள்பட 10 பேர் பலியாயினர் .

இந்த விமானத்தில் இந்திய வீரர்கள் 10 பேர் பயணம் செய்தனர். டில்லியில் இருந்து ராஞ்சி நோக்கி புறப்பட்ட விமானம், துவாரகாவில் உள்ள பத்போலா என்ற கிராமத்திற்கு அருகில் விழுந்து நொறுங்கியது. தீயணைப்புப் படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர் .

விமானத்தில் 3 இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், 7 தொழில்நுட்ப வல்லுநர்கள் என 10 பேரும் உயிரிழந்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறியுள்ளார் .

விமான விபத்து நடந்த இடத்துக்கு, எல்லை பாதுகாப்பு படை ஐ.ஜி மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். விபத்து குறித்து உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments