இது தொடர்பாக ஜூனியர் விகடன் வாரம் இருமுறை ஏடு ஒரு சர்வே நடத்தி உள்ளது. மொத்தம் 16,846 பேரிடம் நடத்தப்பட்டது இந்த கருத்துக் கணிப்பு.
இதில் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்குத்தான் அதிக ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 38.41% பேர் அ.தி.மு.க.வின் அடுத்த தலைவராக வரத் தகுதியானர் ஓ.பி.எஸ். என கூறியுள்ளனர். அதாவது மொத்தம் 6,470 பேர் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஓ.பி.எஸ்.க்கு அவரது மதுரை மண்டலத்தில் 2,131 பேரும் சென்னை மண்டலத்தில் 2,063 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் அ.தி.மு.க.வின் அடுத்த தலைவராக வர சசிகலாவுக்கு தகுதி இல்லை என 93% பேர் கூறியுள்ளனர். மொத்தம் 7.25% பேர்தான் (1,222) சசிகலாவுக்கு தகுதி இருப்பதாக கூறியுள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா அல்லாமல் இன்னொருவரை அதிகம் பேர் விரும்புவதாகவும் கூறுகிறது இந்த கருத்து கணிப்பு. அதாவது "மற்றவர்கள்" என்ற ஆப்சனுக்கு 54% பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக குறிப்பிடுகிறது ஜூ.வி. சர்வே.
Comments