அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

தினமலர் செய்தி : சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது: தெற்கு அந்தமான் கடல்பகுதியில் புதிய காற்றெழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. நாளை மறுநாள் (நவ. 14-ம் தேதி) தென்கிழக்கு வங்க கடலில் காற்றெழுத்த தாழ்வு பகுதியாக மாறும். கேரளாவில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி தெற்கு அரபிக்கடல் நேக்கி நகர்ந்து வருகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் , கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Comments