கடந்த, 1993ல், மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், சட்டவிரோதமாக, ஏ.கே.56 ரக துப்பாக்கிகள் வைத்திருந்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில், நடிகர் சஞ்சய் தத்துக்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர், மஹாராஷ்டிர மாநிலம், புனேயில் உள்ள, எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கோர்ட் விதித்த தண்டனைப்படி, 2016 நவம்பர் வரை, அவர் சிறையிலிருக்க வேண்டும். ஆனால், நன்னடத்தை அடிப்படையில், அவர் முன்னதாகவே விடுதலையாக வாய்ப்புள்ளதாக அவரது மனைவி மான்யதா தெரிவித்துள்ளார். 'மான்யதாவின் கருத்து, அனுமானங்கள் அடிப்படையிலானது; சஞ்சய் தத் விடுதலை விவகாரத்தில், இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் சிறை அதிகாரிக்கு மட்டுமே உள்ளது' என, அவரின் வழக்கறிஞர் ஹிதேஷ் ஜெயின் தெரிவித்துள்ளார்.
'சஞ்சய் தத்துக்கு என, விதிவிலக்கு அளிக்கப்படவில்லை. நன்னடத்தை அடிப்படையில், அனைத்து கைதிகளுக்கும், மாதத்தில் சில நாட்கள் என, தண்டனை குறைக்கப்படுவது வழக்கம். அதுபோல, சஞ்சய் தத்தின் தண்டனை குறைப்பும் உரிய நேரத்தில் பரிசீலிக்கப்படும்' என, எரவாடா சிறை அதிகாரி பவார் தெரிவித்துள்ளார்.
Comments