அமீர் கான் மீது எப்.ஐ.ஆர். பதிவு

தினமலர் செய்தி : மும்பை : இந்தியாவில் பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதாகவும், குழந்தைகளின் எதிர்காலம் கருதி வேறு நாட்டிற்கு சென்றுவிடலாமா என்று மனைவி கிரண் கேட்டிருந்ததாக நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் நடிகர் அமீர் கான் கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்புகளில் எதிர்ப்புகள் உருவாகியிருந்தன. இதனிடையே, ஆவணப்பட இயக்குநர் அளித்த புகாரின் பேரில் அமீர் கான் மீது போலீசார் எப்.ஐ.ஆர். பதிவுசெய்துள்ளனர்.

நான் இந்தியாவில் வாழும் முஸ்லீம் என்பதில் பெருமை கொள்கிறேன். நான் பல கலவரங்களை பார்த்துள்ளேன். இருந்தபோதிலும் இந்தியாவில் வாழவே விரும்புகிறேன். அமீர் கானிடமிருந்து இத்தகைய வார்த்தைகளை நான் எதிர்பார்க்கவில்லை என்று தெலுங்கானா பகுதி எம்.பி. ஓவைசி கூறியுள்ளார்.

Comments