மேட்டூர் அருகே நில அதிர்வு: மக்கள் பீதி

தினமலர் செய்தி : மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே 10 கி.மீ., தொலைவில், இரவு 8.15 மணியளவில் இடி இடித்தது போன்று சத்தம் கேட்டது. கடைகளின் ஷட்டர்கள் தானாக கீழே இறங்கின. வீடுகள் குலுங்கின. வீட்டில் உள்ள பாத்திரங்கள் கீழே விழுந்தன. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நில அதிர்வு காரைக்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலும் உணரப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Comments