பார்லி கூட்டத்தொடர் வீணாகாது: மோடி ; இன்று முதல் துவங்கி ஒரு மாத காலம் நடக்கவிருக்கும் பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் வீணாக போகாது என்றும், மக்களின் எதிர்பார்ப்பை எம். பி. ,க்கள் நிறைவேற்றுவார்கள் என்றும் பிரதமர் மோடி கூறினார் .
பார்லி கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் பார்லி ., வளாகத்தில் நிருபர்களிடம் பேசுகையில்: இன்று இந்திய அரசியலமைப்பு உருவான நாள் , அம்பேத்கருக்கு நாங்கள் தலைவணங்குகிறோம், இந்நாளை வெகுவாக கொண்டாடும் வகையில் அரசியலமைப்பு சட்ட நாளாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்திய அரசியலமைப்பு என்பது மக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கும் அம்சமாக உள்ளது , இதனால் HOPE என்பதன் விளக்கம் : எச்: ஹார்மோனி, ஓ : ஆப்ர்ஷூனிட்டி, பி ; பார்ட்டிசிபேஷன், ஈ : இக்குவோலிட்டி ஆகும்.
இன்றைய பார்லி., கூட்டம் துவங்கவிருக்கிறது, விவாதமும், கலந்துரையாடலும் பார்லியின் மைய இடமாகும் ,இதன் மூலம் நாம் எதையும் செயல்படுத்த முடியும் .பார்லியை தவிர நாட்டில் உயர்ந்தது எதுவும் இல்லை. இந்த பார்லி, கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும், இது தொடர்பாக நேற்று அனைத்து கட்சியினரையும் சந்தித்து வேண்டுகோள் விடுத்தேன் , மக்களின் எதிர்பார்ப்பை எம் பிக்கள் நிறைவேற்ற வேண்டும் .இந்த கூட்டத்தொடர் வீணாக போகாது என்று நம்புகிறேன், பயனுள்ளதாக்க வேண்டும் இவ்வாறு மோடி கூறினார் .
கண்காட்சி திறப்பு : இந்திய அரசியலமைப்பு தின கண்காட்சியை பிரதமர் மோடியும், சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர் .
Comments