ஆனால் சற்று பின்னோக்கிப் பார்த்தால், அது விஜய் படத்தில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட வார்த்தைதான் என்பது தெரியவரும்.
தெறி என்பது அதற்கு முன்பு வரை ரஜினி ரசிகர்கள்தான் பயன்படுத்தி வந்தனர். தெறி மாஸ் தலைவா என்று ரசிகர்கள் போஸ்டர்கள், ப்ளக்ஸ்கள் வைப்பது வழக்கம்.
பின்னர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான கத்தி படத்தின் போஸ்டர் விளம்பரங்களில் தெறி என்ற வார்த்தைப் பயன்படுத்தப்பட்டது.
தெறி வெற்றி, தெறி 50வது நாள், தெறி வெற்றி.. 100வது நாள் என்றெல்லாம் குறிப்பிட்டு போஸ்டர் அடித்தனர். விளம்பரமும் வெளியிட்டனர்.
ஆக, விஜய் படத்தின் தலைப்பை அஜீத்தின் வேதாளத்துடன் முடிச்சுப் போட வேண்டியதில்லை. தெறி... விஜய் படத்தில் பயன்படுத்தப்பட்டதுதான்!
Comments