சென்னைவாசிகளே... அடுத்த ஒரு வாரத்துக்கு நீச்சலடிச்சுதான் நீங்க ஆபிஸ் போகணுமாம்!

Chennai will be surrounded by water for next one weekOneIndia News : சென்னை: சென்னை மாநகரமே கிட்டதட்ட போட் சர்வீஸும், ரோப் கார் சர்வீஸும் ஆரம்பிக்கும் அளவிற்கு மழை நீரில் மூழ்கிக் கிடக்கின்றது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடிப்பதால் சென்னையில் இன்னும் 4 அல்லது 5 நாட்களுக்கு மழை விடாது என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும், வருகின்ற நாட்களில் எவ்வளவு மழை பொழியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 14 ஆம் தேதி சனிக்கிழமை - மேக மூட்டமாக காணப்படும். 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை - பரவலாக மழை பெய்யும். 30% மழைக்கு வாய்ப்பு உள்ளது. 16 ஆம் தேதி திங்கட்கிழமை - பலத்த மழை பெய்யும். 60% மழைக்கு வாய்ப்பு.

17 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை - பலத்த மழை பெய்யும். 80% மழைக்கு வாய்ப்பு. 18 ஆம் தேதி புதன்கிழமை - மிக பலத்த மழை பெய்யும். 85% மேல் மழைக்கு வாய்ப்பு. 19 ஆம் தேதி வியாழக்கிழமை - பலத்த மழை பெய்யும். 60% மழைக்கு வாய்ப்பு. 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை - பலத்த மழைக்கு வாய்ப்பு.
Chennai will be surrounded by water for next one week
21 ஆம் தேதி சனிக்கிழமை - லேசான மழை பெய்யும். 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை - மழை படிப்படியாக குறையும். அதனால், அடுத்த வாரம் ஞாயிற்றுக் கிழமை வரையில் சென்னைவாசிகள் படகு ஓட்டவும், மிதக்கவும், நீச்சலடிக்கவும் கற்றுக் கொள்வது சாலச் சிறந்தது!

Comments