பெட்ரோல், டீசல் விலை உயர்வு

தினமலர் செய்தி : புதுடில்லி: பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 36 பைசாவும்; டீசல் விலை, 87 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததை அடுத்து, பெட்ரோல், டீசல் விலை, உயர்த்தப்பட்டது. பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 36 பைசாவும்; டீசல் விலை, 87 பைசாவும் உயர்த்தப்பட்டது. ஐந்து மாதங்களாக பெட்ரோல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. அதேநேரத்தில், கடந்த மாதத்தில் இருந்து, இதுவரை, மூன்று முறை, டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

விலை உயர்வை அடுத்து, சென்னையில், 1 லிட்டர் பெட்ரோல், 36 காசுகள் அதிகரித்து, 61.38 ரூபாய்க்கும்; டீசல் விலை, 90 காசுகள் அதிகரித்து, 48 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Comments