கிரானைட் முறைகேடு : சகாயம் அறிக்கை தாக்கல் ; சி.பி. ஐ., விசாரிக்க உத்தரவிட பரிந்துரை

தினமலர் செய்தி : சென்னை: மதுரையில் கிரானைட் முறைகேடு தொடர்பாக சகாயம் குழு ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது . தலைமை நீதிபதி எஸ் .கே.கவுல் தலைமையிலான பெஞ்ச் முன்பு தாக்கல் செய்தனர் .மதுரை மாவட்டம் மேலூர் அருகே கிரானைட் முறைகேட்டினால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது . இது தொடர்பான விசாரணை நடத்த ஐ .ஏ .எஸ்., அதிகாரி சகாயம் தலைமையிலான குழு அமைக்க ஐகோர்ட் உத்தரவிட்டது .இதன்படி கடந்த 2014 முதல் இந்த விசாரணை நடந்தது. 

விசாரணை அறிக்கையை வக்கீல் சுரேஷ்குமார் ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார் . 7 ஆயிரம் பக்க ஆவணங்கள் , 600 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்ப்பட்டது ,மேலும் சகாயத்திற்கும், இந்த விசாரணயைில் சாட்சி அளித்தவர்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. 

கடந்த 20 ஆண்டுகளாக நடந்த இந்த முறைகேட்டில் அதிகாரிகள் பலருக்கு தொடர்பு உள்ளது என்றும், இது தொடர்பாக சி.பி. ஐ.,யின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது .


வழக்கை ஜனவரி 4 ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர் .

Comments