மது விலக்கை வலியுறுத்தி நடத்திவரும் கலை நிகழ்ச்சிகளில் கோவன் பாடிய "மூடு டாஸ்மாக்கை மூடு' என்ற பாடல் மிகவும் பிரபலமாகி வருகிறது. மேலும், இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களிலும் இந்தப் பாடல் பிரபலமாகி வருகிறது. இந்தப் பாடல் தமிழக முதல்வரை விமர்சிப்பதாக உள்ளதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த மாதம், இறுதியில், ஒரு நள்ளிரவு நேரத்தில், சென்னையிலிருந்து திருச்சி வந்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார், பாடகர் கோவனை அவரது வீட்டுக்குச் சென்று கைது செய்து சென்னைக்கு கொண்டு சென்றனர். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த கோவன் தரப்பு ஜாமீனுக்காக விண்ணப்பித்திருந்தது. விசாரணை நடத்திய செஷன்ஸ் கோர்ட் இன்று மாலை கோவனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
Comments