சென்னையில் ஒரு மணி நேரமாக கனமழை; போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

தினமலர் செய்தி : சென்னை: சென்னையில், கிண்டி, ஈக்காட்டத்தாங்கல், வடபழனி, கோயம்பேடு, போரூர், விருகம்பாக்கம், தி.நகர், நந்தனம், சைதை, பூந்தமல்லி, எழும்பூர், சேப்பாக்கம், கிண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் புரசைவாக்கம், பூவிருந்தவள்ளி உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

Comments