தினமலர் செய்தி : சென்னை : சென்னையில் கனமழை பெய்துவருவதால், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (24ம் தேதி) விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி - திருச்செந்தூர் போக்குவரத்து பாதிப்பு
தூத்துக்குடி : தூத்துக்குடியில் ஏற்பட்டவரலாறு காணாத வெள்ள பெருக்கு நேற்று காலை முதல் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கானோர் வீட்டு மாடிகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். உணவு, குடி நீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்பு படையினர் கயிறு கட்டி மீட்டனர்.செய்வதறியாமல் மாவட்ட நிர்வாகம் தவித்து வருகிறது. போக்குவரத்து துண்டிப்பு: தூத்துக்குடி- திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு ரோட்டை கடக்க முடியாத நிலை ஏற்பட்டது. ரோட்டில் இருந்த டிவைடர்கள் உடைக்கப்பட்டு வெள்ளம் வடிய வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து காலை 8 மணி முதல் நிறுத்தப்பட்டது. திருநெல்வேலியிலிருந்து புதுக்கோட்டை வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டன. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் ரோடு வழியாக முக்காணி , ஆத்தூர்,சாகுபுரம்,குரும்பூர், வழியாக திருநெல்வேலிக்கு மாற்றுப்பாதை வழியாக இயக்கப்பட்டது. தூத்துக்குடி- திருச்செந்தூர் பஸ்களும் ரத்து செய்யப்பட்டன.
Comments