அப்போது அங்கு மக்கள் கூட்ட அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து பிரச்சார வேனில் நின்றிருந்த விஜயகாந்த், வண்டியை வேகமாக எடுக்கச் சொல்லி கோபத்தில் டிரைவரை உதைத்துள்ளார். பின்னர் வேனில் தமக்கு பின்னால் நின்றிருந்த பண்ருட்டி எம்.எல்.ஏ. சிவக்கொழுந்தின் தலையில் ஓங்கி 4 முறை சரமாரியாக அடித்தார் விஜயகாந்த். தொகுதி முன்னிலையில் விஜயகாந்த் அப்பகுதி எம்.எல்.ஏ.வை அடித்ததால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. பொதுவாக விஜயகாந்த் பொது இடங்களில் கோபப்பட்டு கட்சியினரை அடிப்பது வழக்கமாக ஒன்றுதான்; அதேபோல் பத்திரிகையாளர்களிடம் பாயக் கூடியவர்.. இந்த நிலையில் கோபத்தை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஒரு வார காலம் கோவையை அடுத்த ஈஷா யோகா மையத்துக்கு சென்று யோகா பயிற்சிகளை கற்றுக் கொண்டு நேற்றுதான் சென்னை திரும்பியிருந்தார் விஜயகாந்த். இந்நிலையில் மீண்டும் கோபத்துடன் எம்.எல்.ஏ.வை விஜயகாந்த் தாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments