தினமலர் செய்தி : சென்னை : தெற்கு அந்தமான் பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வாய்ப்பு உள்ளது. இதே போன்று தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தம், காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக நவம்பர் 28ம் தேதி தமிழகம், புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களில் கனமழையும், நவம்பர் 29ம் தேதி மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments