தமிழக அமைச்சரவையில், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், வைத்தி லிங்கம், மோகன், காமராஜ் ஆகியோர், தலா, இரண்டு துறைகளை கவனித்து வருகின்றனர். இதனால், அமைச்சரவையில் மாற்றம் வரலாம்; புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு, எம்.எல்.ஏ.,க்களிடமும், 'மாஜி' அமைச்சர்களிடமும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், முத்தரையர் சமுதாயத்தை அவமதித்து பேசியதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும், சசிகலா தரப்பினர் தியேட்டர் வாங்கிய விவகாரம் குறித்து, ஏடாகூடமாக பேசியதாக, அமைச்சர் வீரமணி மீதும், புகார் வாசிக்கப்பட்டது. இருவரும், 'அவ்வாறு பேசவில்லை' என, தலைமையிடம் விளக்கம் அளித்துள்ளனர். இந்த நிலையில், விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்ற செய்தியால், எல்லா அமைச்சர்களும் கலக்கம் அடைந்துள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர் கனவில் உள்ளனர்.
Comments