அதிகப்படியான வாசகர்களின் ஓட்டுகளை பெறுபவர், இந்தாண்டின் சிறந்த மனிதராக அடுத்த மாதம் அறிவிக்கப்படுவார். இதுவரை, மோடி, சுந்தர் பிச்சை, ரஷ்ய அதிபர் புடினுக்கு ஆதரவாக, தலா, 1.3 சதவீத வாசகர்கள் ஓட்டளித்துள்ளனர். முகேஷ் அம்பானிக்கு, 0.2 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
'உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை நவீனமயமாக்கவும், அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்கவும், மோடி சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறார்; அதே நேரத்தில், பல்வேறு சர்ச்சைகளுக்கும் ஆளாகியுள்ளார்' என, டைம் பத்திரிகை தெரிவித்துள்ளது.
எண்ணெய் சுத்திகரிப்பு முதல், தொலைத்தொடர்பு துறை வரை அனைத்து துறைகளிலும் கால் பதித்து, இந்தியாவின், 'நம்பர் ஒன்' பணக்காரராக, முகேஷ் அம்பானி திகழ்கிறார், 'கூகுள் நிறுவனத்தில், 11 ஆண்டுகள் பணியாற்றி, அந்நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான, லாரி பேஜ்ஜின் வலது கரமாக, சுந்தர் பிச்சை உயர்ந்துள்ளார்' என, டைம் பாராட்டியுள்ளது.
மோடி, கடந்த ஆண்டும் டைம் பத்திரிகையின், சிறந்த மனிதருக்கான போட்டியில் இடம் பெற்றிருந்தார்; 50 லட்சம் வாசகர்களில், எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர், மோடிக்கு ஓட்டளித்திருந்தனர். இந்தாண்டு போட்டியில், அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹோலண்டே, சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
பணக்கார இந்தியர்கள்
அமெரிக்காவில், 40 வயதிற்கு உட்பட்ட பெரும் பணக்கார தொழிலதிபர்களின் பட்டியலை, பிரபல, 'போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, விவேக் ராமசாமி, 30, அபூர்வா மேத்தா, 29 என்ற இருவர் இடம் பெற்றுள்ளனர்.
முன்னாள் நிதி மேலாண்மை நிர்வாகியான ராமசாமி, 3,300 கோடி ரூபாய் சொத்துகளுடன், 33வது இடத்தையும், 'ஆன்லைன்' முறையில், மளிகை சாமான்களை வினியோகிக்கும், அபூர்வா மேத்தா, 2,640 கோடி ரூபாய் சொத்துகளுடன், 40வது இடத்தையும் பிடித்துள்ளனர்.இந்த பட்டியலில், 'பேஸ்புக்' நிறுவனர், மார்க் ஜுக்கர்பர்க், 3.10 லட்சம் கோடி ரூபாய் சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
டைம் பத்திரிகையானது 90 ஆண்டுகளாக 'சிறந்த மனிதர்' தேர்வை நடத்தி வருகிறது. இப் போட்டியில் மகாத்மா காந்தி, ஹிட்லர், இரண்டாம் எலிசபெத் ராணி உள்ளிட்ட பலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Comments