இந்த வகையில் ஆனந்த விகடன் இதழில் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக 11 பக்க கட்டுரை வெளியாகி உள்ளது. ஜெயலலிதாவின் நான்கரை ஆண்டு கால ஆட்சியை மிகக் கடுமையாக விமர்சிக்கிறது இந்த கட்டுரை.
இதனால் அதிர்ச்சியடைந்த அதிமுகவினர் பல ஊர்களில் ஆனந்த விகடன் பத்திரிகையை ஒட்டுமொத்தமாக வாங்கி வைத்துவிட்டு மக்களுக்கு சென்று சேராமல் பார்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. சில இடங்களில் எரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளரான முன்னாள் அமைச்சரும் தி.மு.க. துணை பொதுச்செயலருமான ஐ. பெரியசாமியின் மகன் ஐ.பி. செந்தில்குமார் தலையில் தி.மு.கவினர் ஆனந்தவிகடனை பொதுமக்களுக்கு இலவசமாக கொடுத்து படித்து பாருங்கள் என கூறினர். சளைக்காமல் பேருந்து பேருந்தாக ஏறி ஆனந்தவிகடனை இலவசமாக கொடுத்தனர் தி.மு.க.வினர். தி.மு.க.வினரின் இந்த அதிரடியால், நாம முந்தவில்லையே என கதிகலங்கி போயுள்ளனர் திண்டுக்கல் அ.தி.மு.க.வினர்.
Comments